1யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
2என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன்,
3உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்;
4யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்;
5உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்;
6யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும்,
7என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்;
8யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்;
9சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி,
10யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு,
11யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது;
12யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ
13அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்;
14யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது;
15என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன;
16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்;
17என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன;
18என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து,
19என்னுடைய எதிரிகளைப் பாரும்;
20என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்;
21உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்;
22தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.