1புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்;
2நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்;
3துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்;
4குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்;
5நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்;
6துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது;
7துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்;
8தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்;
9உணவில்லாதவனாக இருந்தும்,
10நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்;
11தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்;
12துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்;
13துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி;
14அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்;
15மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்;
16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்;
17சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்;
18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு;
19சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்;
20தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது;
21நீதிமானுக்கு ஒரு கேடும் வராது;
22பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;
23விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்;
24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்;
25மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்;
26நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்;
27சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை;
28நீதியின் பாதையில் வாழ்வு உண்டு;