1என் மகனே, என் ஞானத்தைக் கவனத்தில்கொள்,
2அப்பொழுது அறிவுடைமையுடன் நடந்துகொள்வாய்;
3ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும்,
4ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும்,
5அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன;
6அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை,
7ஆகவே என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்;
8அவளுக்குத் தூரமான வழியில் நடங்கள்,
9இல்லையென்றால், உங்களுடைய கனத்தை மற்றவர்களிடமும்
10வேறுநாட்டைச் சேர்ந்தவர் உங்கள் செல்வத்தை அனுபவிப்பார்கள்,
11உங்களுடைய வாழ்க்கையின் முடிவில்,
12அப்பொழுது நீங்கள், “ஐயோ, நான் அறிவுரையை வெறுத்தேனே,
13நான் எனக்கு போதித்தவர்களுக்குக் கீழ்ப்படியவில்லையே,
14நான் இறைவனின் மக்கள் கூட்டத்தில்
15நீ உனது சொந்தக் கிணற்றின் தண்ணீரையே குடி,
16உனது ஊற்றுகள் வீதிகளில் வழிந்தோட வேண்டுமோ?
17அவை உன்னுடையவைகளாக மட்டுமே இருக்கட்டும்,
18உனது ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக,
19அவள் உனக்கு அன்பான பெண்மான் போலவும் அழகியமான் போலவும் இருப்பாளாக,
20என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்?
21மனிதரின் வழிகள் எல்லாம் யெகோவாவுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கின்றன,
22கொடியவர்கள் தம்முடைய தீயசெயல்களாலே அகப்படுகிறார்கள்;
23அவர்கள் நற்கட்டுப்பாடு இல்லாததினால் சாவார்கள்,