1தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்?
2நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும்,
3நெடுங்காலமாகப் பாழாகக்கிடக்கிற இடங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளச்செய்யும்;
4உம்முடைய எதிரிகள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து,
5கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பெயர்பெற்றவனானான்.
6இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் கோடரிகளாலும்,
7உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி,
8அவர்களை ஒன்றாக அழித்துப்போடுவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி,
9எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்;
10தேவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்?
11உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்;
12பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற
13தேவனே நீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து,
14தேவனே நீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு,
15ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்;
16பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது;
17பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டமிட்டீர்;
18யெகோவாவே, எதிரி உம்மை நிந்தித்ததையும்,
19உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவை கொடூர மிருகங்களுடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடுக்காமலிரும்;
20உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்;
21துன்பப்பட்டவன் வெட்கத்தோடு திரும்பவிடாமலிரும்;
22தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்;
23உம்முடைய எதிரிகளின் ஆரவாரத்தை மறக்காமலிரும்;