1யெகோவாவுடைய வேதத்தின்படி
2அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு,
3அவர்கள் அநியாயம் செய்வதில்லை;
4உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி
5உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி,
6நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது,
7உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது,
8உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்;
9வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்?
10என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன்,
11நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு,
12யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்;
13உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
14திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல,
15உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன்.
16உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்;
17உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து,
18உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு,
19பூமியிலே நான் அந்நியன்;
20உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது.
21உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட
22நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்;
23அதிகாரிகளும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்;
24உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும்,
25என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது;
26என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது
27உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்;
28துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது;
29பொய்வழியை என்னைவிட்டு விலக்கி,
30மெய்வழியை நான் தெரிந்துகொண்டு,
31உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்;
32நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது,
33யெகோவாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்;
34எனக்கு உணர்வைத் தாரும்;
35உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்;
36என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல்,
37மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி,
38உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
39நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்;
40இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்;
41யெகோவாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி,
42அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்;
43சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்;
44நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
45நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால்,
46நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து,
47நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன்.
48நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன்,
49நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை
50அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல்,
51பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும்,
52யெகோவாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை
53உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது.
54நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே
55யெகோவாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து,
56நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால்,
57யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு;
58முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்;
59என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு,
60உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி,
61துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும்,
62உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக,
63உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன்.
64யெகோவாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது;
65யெகோவாவே, உமது வசனத்தின்படி
66உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும்,
67நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்;
68தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்;
69பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்;
70அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ,
71நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது;
72அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட,
73உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி,
74நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
75யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும்,
76நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி,
77நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்;
78பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்;
79உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும்.
80நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு,
81உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது;
82எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று,
83புகையிலுள்ள தோல்பை போலானேன்;
84உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு?
85உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
86உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது;
87அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது;
88உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்;
89யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும்
90உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்;
91உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது;
92உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால்,
93நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்;
94நான் உம்முடையவன், என்னை இரட்சியும்;
95துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்;
96நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்;
97உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்!
98நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்;
99உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால்,
100உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால்,
101உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு,
102நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால்,
103உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்;
104உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன்,
105உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும்,
106உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்;
107நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்;
108யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு,
109என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது;
110துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்;
111உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன்,
112முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன்.
113வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
114என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே;
115பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்;
116நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்;
117என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு,
118உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்;
119பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்;
120உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது;
121நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும்.
122உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்;
123உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும்
124உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி,
125நான் உமது ஊழியன்;
126நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது;
127ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
128எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி,
129உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்;
130உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து,
131உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால்,
132உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
133உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி,
134மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்;
135உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து,
136உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால்,
137யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
138நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
139என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால்,
140உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது,
141நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்;
142உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
143துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது;
144உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும்,
145முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்;
146உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்;
147அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்;
148உமது வசனத்தைத் தியானிக்கும்படி,
149உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்;
150தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்;
151யெகோவாவே, நீர் அருகில் இருக்கிறீர்;
152நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை,
153என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்;
154எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும்,
155இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது,
156யெகோவாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது;
157என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்;
158உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது,
159இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே,
160உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம்,
161அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள்,
162மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல,
163பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
164உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
165உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு;
166யெகோவாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து,
167என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்;
168உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்;
169யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக;
170என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்;
171உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது,
172உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால்,
173நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால்,
174யெகோவாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்;
175என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்;
176காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்;