1புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்;
2நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்;
3மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு;
4எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்;
5மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்;
6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்;
7மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ;
8தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்;
9மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்;
10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்;
11துன்மார்க்கனுடைய வீடு அழியும்;
12மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு;
13சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு;
14பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும்,
15பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்;
16ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்;
17முன்கோபி மதிகேட்டைச் செய்வான்;
18பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்;
19தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
20தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்;
21பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்;
22தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ?
23எல்லா உழைப்பினாலும் பயனுண்டு;
24ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்;
25மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்;
26யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு;
27யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று;
28மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை;
29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்;
30சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு;
31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்;
32துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்;
33புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
34நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி.
35ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்;