1அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக:
2“இதற்காக பதில் கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறதினால்
3நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்;
4துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும்,
5அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல்
6அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும்,
7அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்;
8அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்;
9அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை;
10அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்;
11அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து,
12பொல்லாப்பு அவனுடைய வாயிலே இனிமையாயிருப்பதால்,
13அதை விடாமல் அடக்கி,
14அவனுடைய ஆகாரம் அவன் குடல்களில் மாறி,
15அவன் விழுங்கின செல்வத்தைக் கக்குவான்;
16அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்;
17தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை.
18தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்;
19அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு,
20தன் வயிறு திருப்தி அடையாமல் இருந்ததினாலும்,
21அவனுடைய ஆகாரத்தில் ஒன்றும் மீதியாவதில்லை;
22அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின்,
23தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும்,
24இரும்பு ஆயுதத்திற்கு அவன் தப்பியோடினாலும் வெண்கல அம்பு அவனை உருவ எய்யும்.
25உருவின பட்டயம் அவன் சரீரத்தையும்,
26அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்;
27வானங்கள் அவனுடைய குற்றத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.
28வெள்ளத்தினால் அவனுடைய வீட்டின் சம்பத்துப் கரைந்து போய்விடும்;
29இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும்,