1அதற்கு யோபு மறுமொழியாக:
2“ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்;
3அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால்,
4அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்;
5அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்;
6பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
7அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்;
8அவர் ஒருவரே வானங்களை விரித்து,
9அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும்,
10ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும்,
11இதோ, அவர் என் அருகில் போகிறார்,
12இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்?
13தேவன் தம்முடைய கோபத்தை நிறுத்தமாட்டார்;
14இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும்,
15நான் நீதிமானாயிருந்தாலும் அவருடன் வழக்காடாமல்,
16நான் கெஞ்சுவதினாலும், அவர் எனக்கு பதில் கொடுத்தாலும்,
17அவர் புயலினால் என்னை முறிக்கிறார்;
18நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல்,
19பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்;
20நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்;
21நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்;
22ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்;
23வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது,
24உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது;
25என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது;
26அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும்,
27என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி,
28என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்;
29நான் பொல்லாதவனாயிருந்தால்,
30நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி,
31நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர்.
32நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும்,
33எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே.
34அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக;
35அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்;