1“வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்;
2மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்;
3யெகோவாவுடைய நாமத்தை பிரபலப்படுத்துவேன்;
4“அவர் கன்மலை;
5அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல;
6விவேகமில்லாத மதிகெட்ட மக்களே,
7ஆரம்பநாட்களை நினை;
8உன்னதமான தேவன் மக்களுக்குச் சொத்துக்களைப் பங்கிட்டு,
9யெகோவாவுடைய மக்களே அவருடைய பங்கு;
10“பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான வெட்டவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார்,
11கழுகு தன் கூட்டைக் கலைத்து,
12யெகோவா ஒருவரே அவனை வழிநடத்தினார்,
13பூமியிலுள்ள உயர்ந்த இடங்களின்மேல் அவனை ஏறிவரச்செய்தார்;
14பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும்,
15“யெஷூரன்32:15 இஸ்ரவேலின் நீதிபரரை கொழுத்துப்போய் உதைத்தான்;
16அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்;
17அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை;
18உன்னை பிறக்கச் செய்த கன்மலையை நீ நினைக்காமற்போனாய்;
19“யெகோவா அதைக்கண்டு, தமது மகன்களும்,
20என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்;
21தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி,
22என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது,
23“தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்;
24அவர்கள் பசியினால் வாடி,
25வெளியிலே பட்டயமும்,
26எங்கள் கை உயர்ந்ததென்றும்,
27நான் எதிரியின் கோபத்திற்கு பயப்படாமல் இருந்தேன் என்றால்,
28“அவர்கள் யோசனை இல்லாத மக்கள்,
29அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து,
30அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும்,
31தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.
32அவர்களுடைய திராட்சைச்செடி,
33அவர்களுடைய திராட்சைரசம் வலுசர்ப்பங்களின் விஷமும்,
34“இது என்னிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு,
35பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது;
36யெகோவா தம்முடைய மக்களை நியாயந்தீர்த்து,
37அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு,
38அவைகள் எழுந்து உங்களுக்கு உதவிசெய்து
39“நான் நானே அவர்,
40நான் என் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி,
41மின்னும் என் பட்டயத்தை நான் கூர்மையாக்கி,
42கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்;
43“மக்களே, அவருடைய மக்களுடன் மகிழ்ச்சியாயிருங்கள்; அவர் தமது ஊழியக்காரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கி,
44மோசேயும் நூனின் மகனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.
45மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர்கள் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு,
46அவர்களை நோக்கி: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாக ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.
47இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள்” என்றான்.
48அந்த நாளிலேதானே யெகோவா மோசேயை நோக்கி:
49“நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்கு சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;
50நீங்கள் சீன் வனாந்திரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீரின் அருகில் இஸ்ரவேல் மக்களுக்குள்ளே என்னைப் பரிசுத்தம்செய்யாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,
51உன் சகோதரனாகிய ஆரோன், ஓர் என்னும் மலையிலே மரணமடைந்து, தன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரணமடைந்து, உன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்படுவாய்.
52நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற எதிரேயுள்ள தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ நுழைவதில்லை” என்றார்.