1யெகோவாவே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்,
2நான் உமக்கு உண்மையாயிருப்பதால் என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்;
3என்மேல் இரக்கமாய் இரும், யெகோவாவே,
4யெகோவாவே உமது அடியேனுக்கு மகிழ்ச்சியைத் தாரும்;
5யெகோவாவே, நீர் மன்னிக்கிறவரும் நல்லவருமாய் இருக்கிறீர்;
6யெகோவாவே என் மன்றாட்டுக்குச் செவிகொடும்;
7என் துன்ப நாளிலே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;
8யெகோவாவே, தெய்வங்களில் உம்மைப் போன்றவர் ஒருவரும் இல்லை;
9யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும்
10நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்;
11யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்;
12என் இறைவனாகிய யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்;
13நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது;
14இறைவனே, அகங்காரிகள் என்னைத் தாக்குகிறார்கள்;
15ஆனாலும் யெகோவாவே, நீரோ கருணையும் கிருபையுமுள்ள இறைவனாய் இருக்கிறீர்;
16என் பக்கமாய்த் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்;
17என் பகைவர் கண்டு வெட்கப்படும்படியாக,