1இறைவனே, வெகுகாலத்திற்குமுன்
2நீர் உமது கரத்தால் நாடுகளை வெளியே துரத்தி,
3அவர்கள் தங்கள் வாளினால் நாட்டை உடைமையாக்கவும் இல்லை,
4இறைவனே, நீரே என் அரசன்;
5உம்மாலே நாங்கள் எங்கள் பகைவர்களை விழத்தள்ளி,
6என் வில்லிலே நான் நம்பிக்கை வைக்கிறதில்லை,
7ஆனால் நீரே எங்கள் பகைவர்கள்மீது வெற்றியைக் கொடுத்து,
8நாங்களோ நாள்தோறும் இறைவனிலேயே பெருமை பாராட்டுகிறோம்;
9இப்பொழுதோ நீர் எங்களைப் புறக்கணித்து, சிறுமைப்படுத்திவிட்டீர்;
10எங்கள் பகைவருக்கு முன்பாக எங்களைப் பின்வாங்கச் செய்தீர்;
11செம்மறியாடுகளைப்போல் நீர் எங்களை இரையாகக் விட்டுக்கொடுத்தீர்;
12நீர் உமது மக்களை மலிவாக விற்றுப் போட்டீர்;
13எங்கள் அயலவருக்கு எங்களை ஒரு நிந்தையாக்கி விட்டீர்;
14நீர் எங்களைப் நாடுகளுக்கு நடுவில் ஒரு பழமொழியாக ஆக்கினீர்;
15நாள்தோறும் நான் அவமானத்தில் வாழ்கிறேன்;
16என்னை நிந்தித்துத் தூஷித்து பழிவாங்கத் துடிக்கும்
17நாங்கள் உம்மை மறவாமல் இருந்தோம்;
18எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை,
19ஆனாலும் நீர் எங்களை இடித்து, எங்கள் இடங்களை நரிகளின் உறைவிடமாக்கினீர்;
20எங்கள் இறைவனின் பெயரை நாங்கள் மறந்திருந்தால்,
21இறைவன் அதைக் கண்டுபிடியாமல் இருந்திருப்பாரோ?
22ஆனாலும் உமக்காகவே நாங்கள் நாள்முழுதும் மரணத்தை சந்திக்கிறோம்;
23யெகோவாவே, எழுந்தருளும்! ஏன் நித்திரை செய்கிறீர்?
24நீர் ஏன் உமது முகத்தை மறைத்து,
25நாங்கள் தூசியில் தள்ளப்பட்டிருக்கிறோம்;
26நீர் எழுந்து எங்களுக்கு உதவிசெய்யும்;