1அரசன் லேமுயேலின் வார்த்தைகள்: இது அவனுடைய தாயினால் அவனுக்குப் போதிக்கப்பட்ட இறைவாக்கு.
2என் மகனே! என் கர்ப்பத்தின் மகனே!
3நீ பெண்களிடம் உன் பெலனைக் கொடுக்காதே,
4லேமுயேலே, திராட்சைமது அருந்துவது அரசர்களுக்கு உகந்ததல்ல,
5அரசர்கள் குடிப்பதினால் சட்டத்தை மறந்து போவார்கள்
6அழிந்து போகிறவர்களுக்கு மதுபானத்தைக் கொடு,
7அவர்கள் குடித்துத் தங்கள் வறுமையை மறக்கட்டும்,
8தங்களுக்காகப் பேச முடியாதவர்களுக்காகப் பேசு,
9அவர்களுக்காகப் பேசி, நியாயமாகத் தீர்ப்பு வழங்கு;
10நற்குணமுடைய மனைவியை யாரால் கண்டடைய முடியும்?
11அவளின் கணவன் அவளில் முழுநம்பிக்கை வைத்திருக்கிறான்;
12அவள் தன் வாழ்நாட்கள் முழுவதும்
13அவள் கம்பளியையும் சணலையும் தெரிந்தெடுத்து,
14அவள் தூர இடத்திலிருந்து உணவுப் பொருட்களை
15அவள் விடியுமுன்னே இருட்டோடே எழும்புகிறாள்;
16அவள் ஒரு வயலைப்பற்றிக் கருத்தாய் விசாரித்து, அதை வாங்குகிறாள்;
17மிகவும் சுறுசுறுப்புடன் தன் வேலைகளைச் செய்கிறாள்;
18தன் தொழில் இலாபகரமாய் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறாள்;
19அவள் தன் கைகளில் இராட்டினத்தைப் பிடித்துக்கொண்டு,
20அவள் ஏழைகளுக்குத் தன் கைகளைத் திறந்து,
21அவளின் வீட்டார் எல்லோருக்கும் குளிர்க்கால உடை இருப்பதால்,
22அவள் தனது படுக்கைக்குரிய போர்வையைத் தானே நெய்கிறாள்;
23அவளுடைய கணவன் பட்டண வாசலில்,
24அவள் சிறந்த பட்டாடைகளை நெய்து அவற்றை விற்கிறாள்,
25அவள் பெலத்தையும் கவுரவத்தையும் உடுத்தியிருக்கிறாள்;
26அவள் ஞானமாய்ப் பேசுகிறாள்,
27அவள் தன் வீட்டுக் காரியங்கள்மேல் எப்போதும் அக்கறையாயிருக்கிறாள்;
28அவளுடைய பிள்ளைகள் எழுந்து அவளை, “ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்கிறார்கள்;
29“அநேகம் பெண்கள் சிறப்பான செயல்களைச் செய்கிறார்கள்,
30கவர்ச்சித் தோற்றம் வஞ்சகமானது, அழகும் அழிந்துபோகும்;
31அவளுடைய கைகளின் பலனுக்காக அவளைப் பாராட்டுங்கள்,