1அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
2“இன்றும் என் முறையீடு கசப்பானதாக இருக்கிறது;
3அவரை எங்கே கண்டுகொள்ளலாம் என்று மாத்திரம் எனக்குத் தெரிந்தாலோ,
4நான் என் வழக்கை அவர் முன்னால் வைப்பேன்;
5அவர் எனக்கு என்ன பதில் சொல்வார் என்பதை அறிந்து,
6அவர் தமது மிகுந்த வல்லமையினால் என்னை எதிர்ப்பாரோ?
7நேர்மையானவன் அவருக்குமுன் தன் வழக்கைக் கொண்டுவரலாம்;
8“ஆனால் நான் கிழக்கேபோனால் அங்கே அவர் இல்லை;
9அவர் வடக்கிலே வேலையாயிருக்கும்போதும் நான் அவரைக் காணவில்லை;
10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்;
11என் பாதங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றின;
12அவருடைய உதடுகளின் கட்டளைகளிலிருந்து நான் விலகவில்லை;
13“ஆனால் அவரோ தன்னிகரற்றவராய் இருக்கிறார்; அவரை யாரால் எதிர்க்கமுடியும்?
14எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுகிறார்;
15அதினால்தான் நான் அவர் முன்பு திகில் அடைகிறேன்;
16இறைவன் என் இருதயத்தை சோர்வடையப் பண்ணினார்;
17அப்படியிருந்தும், நான் இருளினால் மவுனமாக்கப்படவில்லை;