1எருசலேமின் வீதிகளில் அங்கும் இங்கும் போய்,
2“யெகோவா இருப்பது நிச்சயமெனில்” என்று அவர்கள் சொன்னாலும்,
3யெகோவாவே, உம்முடைய கண்கள் உண்மையைத் தேடவில்லையா?
4“இவர்கள் ஏழைகளும் மூடர்களுமானவர்கள்
5ஆகவே நான் தலைவர்களிடம்போய் அவர்களோடு பேசுவேன்;
6இதனால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களை தாக்கும்,
7“நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்?
8அவர்கள் கொழுமையாய் வளர்க்கப்பட்ட ஆண் குதிரைகளைப்போல்,
9இதற்காக நான் அவர்களைத் தண்டிக்க வேண்டாமோ?”
10“திராட்சைத் தோட்ட மதில்கள் மேலேறிப்போய் அவைகளைப் பாழ்படுத்து,
11இஸ்ரயேல் குடும்பமும், யூதா குடும்பமும் முழுவதும்
12அவர்கள் யெகோவாவைப் பற்றிப் பொய் உரைத்தார்கள்;
13இறைவாக்கினர் வெறும் காற்றுதானே,
14ஆகையால் சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வதாவது:
15இஸ்ரயேல் குடும்பமே,
16அவர்களுடைய அம்புக்கூடுகள் திறந்த சவக்குழியைப் போன்றவை.
17அவர்கள் உங்களுடைய அறுவடைகளையும், உணவையும் விழுங்குவார்கள்.
18ஆயினும் அந்த நாட்களில் உங்களை முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
19மேலும், “எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு ஏன் இவைகளை எல்லாம் செய்தார்” என்று, நீங்கள் கேட்கும்போது, “நீங்கள் என்னைக் கைவிட்டு உங்கள் சொந்த நாட்டிலே அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தீர்கள். ஆகவே நீங்கள் இப்பொழுது உங்களுக்குரியதல்லாத நாட்டில் அந்நியருக்குப் பணிசெய்வீர்கள் என்று அவர்களுக்குச் சொல்.
20“இதை நீ யாக்கோபின் குடும்பத்திற்கு அறிவித்து
21மூடரே, உணர்ச்சியற்ற மக்களே,
22நீங்கள் எனக்குப் பயப்பட வேண்டியதில்லையோ?”
23ஆனால் இந்த மக்களோ பிடிவாதமும், கலகமும் உள்ள
24‘எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கே நாங்கள் பயப்படுவோம்.
25உங்கள் கொடுமையான செயல்களே,
26“என்னுடைய மக்களிடையே கொடுமையான மனிதர் இருக்கிறார்கள்;
27பறவைகள் நிறைந்த கூடுகளைப்போல,
28அவர்கள் கொழுமையும் செழுமையுமாயிருக்கிறார்கள்.
29இதற்காக நான் அவர்களை தண்டிக்க வேண்டாமோ?”
30“நாட்டில் பயங்கரமும்,
31இறைவாக்கினர் பொய்யையே இறைவாக்காகச் சொல்கிறார்கள்.