We Believe JesusFé, Esperança e Nova Vida

யாத் 15

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← யாத் 14 யாத் யாத் 16 →

1அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு:

2யெகோவா என்னுடைய பெலனும்

3யெகோவாவே யுத்தத்தில் வல்லவர்;

4பார்வோனின் இரதங்களையும்

5ஆழம் அவர்களை மூடிக்கொண்டது;

6யெகோவாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது;

7உமக்கு விரோதமாக எழும்பினவர்களை உமது பெரிய மகத்துவத்தினாலே அழித்துப்போட்டீர்; உம்முடைய கோபத்தை அனுப்பினீர்,

8உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது;

9தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன்,

10உம்முடைய காற்றை வீசச்செய்தீர்,

11யெகோவாவே,

12நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்;

13நீர் மீட்டுக்கொண்ட இந்த மக்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்;

14மக்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்;

15ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்;

16பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும்.

17நீர் அவர்களைக் கொண்டுபோய்,

18யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார்.

19பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும்

20ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன்னுடைய கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; எல்லாப் பெண்களும் தம்புருக்களோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

21மிரியாம் அவர்களுக்குப் பதிலாக:

22பின்பு மோசே இஸ்ரவேல் மக்களைச் செங்கடலிலிருந்து பயணமாக நடத்தினான். அவர்கள் சூர் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள்.

23அவர்கள் மாராவிற்கு15:23 கசப்பு வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது.

24அப்பொழுது மக்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.

25மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடன், அது இனிமையான தண்ணீரானது. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு கட்டளையையும், ஒரு நீதிநெறிகளையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:

26நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார்.

27பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள்.

← யாத் 14 யாத் யாத் 16 →

யாத் 15 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு