1“லிவியாதான் என்னும் பெரிய பாம்பைத் தூண்டிலினால் பிடிக்க முடியுமோ?
2அதற்கு மூக்கணாங்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ?
3அது உன்னிடத்தில் இரக்கம் கேட்டு, மன்றாடிக்கொண்டிருக்குமோ?
4வாழ்நாள் முழுவதும் நீ அதை அடிமையாக்கிக்கொள்ளும்படி,
5ஒரு பறவையைப்போல் நீ அதை வளர்க்க முடியுமோ?
6வியாபாரிகள் அதைப் பரிமாறிக்கொள்வார்களோ?
7அதின் உடலை ஈட்டிகளினாலும்,
8அதின்மேல் உன் கையைப்போட்டால், அது அடிப்பதை நீ மறக்கமாட்டாய்;
9அதை அடக்குவதற்கான எந்த எதிர்பார்ப்பும் வீணானது;
10அதை எழுப்ப தைரியமுள்ளவன் இல்லை.
11தனக்கு பதில் கொடுக்கவேண்டுமென்று முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்?
12“இப்பொழுது நான் லிவியாதானின் கால்களைப்பற்றியும்,
13அதின் மேற்தோலை உரிக்கக்கூடியவன் யார்?
14பயங்கரப் பற்கள் நிறைந்த
15அதின் முதுகில் உள்ள செதில்கள் நெருங்கி
16அவைகளின் ஒவ்வொரு வரிசையும்
17அவை ஒன்றோடொன்று நெருக்கமாய் இணைந்து
18அது மூச்சுவிடும்போது அனல் வீசுகிறது;
19அதின் வாயிலிருந்து நெருப்புத் தணல்கள் புறப்பட்டு,
20எரியும் நாணல்மீது கொதிக்கும் சட்டியிலிருந்து எழும்புவதுபோல்,
21அதின் மூச்சு கரியைக் கொழுத்தி எரியச்செய்கிறது;
22அதின் கழுத்திலே வல்லமை இருக்கும்;
23அதின் தசை மடிப்புகள் அசைக்க முடியாதபடி
24அதின் நெஞ்சு கற்பாறையைப்போலவும்,
25அது எழும்பும்போது பலவான்கள் திகிலடைந்து,
26அதைத் தாக்குகிறவனுடைய வாள், ஈட்டி, அம்பு,
27அது இரும்பை வைக்கோலாகவும்,
28அம்பு அதனைத் துரத்தாது;
29பெருந்தடி அதற்கு வைக்கோல் போன்றது;
30அதின் அடிப்பக்கம் கூர்மையான கற்கள் கிடந்தாலும்,
31அது கொதிக்கும் பானையைப்போல் ஆழ்கடல்களைப் பொங்கச்செய்து,
32அது தன் பின்னால் பாதையை மின்னச்செய்யும்;
33பூமியின்மேல் உள்ளதொன்றும் அதற்கு நிகரானதல்ல;
34அகந்தையான எல்லாவற்றையும் அது அற்பமாய் எண்ணுகிறது;