1என் மூச்சு நின்றுபோகிறது,
2கேலி செய்கிறவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றனர்;
3“இறைவனே, நீர் கேட்கும் பிணையை நீரே எனக்குத் தாரும்.
4விளங்கிக்கொள்ளாதபடி அவர்களுடைய மனதை நீர் அடைத்தீர்.
5தன் சொந்த நலன் கருதி சிநேகிதர்களுக்குத் துரோகம் செய்தால்,
6“இறைவன் என்னை எல்லோருக்கும் ஒரு பழமொழியாக்கினார்;
7துயரத்தினால் என் கண்கள் மங்கிப்போயின;
8நேர்மையான மனிதர் இதைக்கண்டு திகைக்கிறார்கள்;
9ஆனாலும் நேர்மையானவர்கள் தங்கள் வழிகளில் உறுதியாய் நிற்பார்கள்;
10“நீங்கள் எல்லோரும் வாருங்கள், முயன்று பாருங்கள்!
11என் நாட்கள் கடந்துபோயின; என் திட்டங்கள் சிதைந்துவிட்டன.
12இந்த மனிதர் இரவைப் பகலாக மாற்றுகிறார்கள்;
13நான் எதிர்பார்த்திருக்கும் ஒரே வீடு பாதாளமாய் இருந்திருந்தால்,
14நான் அழிவைப் பார்த்து, ‘நீ என் தகப்பன்’ என்றும்,
15என் நம்பிக்கை எங்கே?
16என் நம்பிக்கை என்னுடன் பாதாளத்திற்கு வருமோ?