1சீயோனில் உல்லாசமாய் இருக்கிறவர்களே,
2கல்னே பட்டணத்துக்குப் போய் அதைப் பாருங்கள்,
3நீங்கள் தீமையின் நாளைப் பற்றி எண்ணாதிருக்கிறீர்கள்.
4நீங்களோ தந்தம் பதித்த கட்டில்களில் படுக்கிறீர்கள்.
5தாவீதைப்போல் உங்கள் யாழ்களை மீட்டுகிறீர்கள்.
6பெரிய கிண்ணங்களில் நிறைய திராட்சை இரசம் குடிக்கிறீர்கள்,
7ஆதலால் நாடுகடத்தப்படும்போது, நீங்களே முதலாவதாகக் கொண்டுபோகப்படுவீர்கள்.
8ஆண்டவராகிய யெகோவா தமது பெயரில் ஆணையிட்டிருக்கிறார்; சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறார்.
9அப்பொழுது ஒரு குடும்பத்தில் பத்துபேர் எஞ்சியிருந்தால், அவர்களும் சாவார்கள்.
10உடல்களை எரிக்கவேண்டிய உறவினன் ஒருவன் அவற்றை எடுத்துச் செல்வதற்கு வந்து, அங்கு மறைந்திருக்கிற எவனையாவது பார்த்து, “இன்னும் உன்னுடன் வேறு யாராவது இருக்கிறார்களா?” எனக் கேட்கும்போது அவன், “இல்லை” என்பான். மேலும் அவன், “சத்தமிடாதே! நாம் யெகோவாவின் பெயரை வாயால் உச்சரிக்கக் கூடாது” என்பான்.
11ஏனென்றால், யெகோவா கட்டளையிட்டிருக்கிறார்.
12செங்குத்தான பாறைகளில் குதிரைகள் ஓடுமோ?
13லோதேபார் என்ற இடத்தைக் கைப்பற்றி மகிழ்கிறவர்களே,
14ஆனால் சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது,