1யெகோவாவை துதியுங்கள்;
2தேவாதி தேவனைத் துதியுங்கள்;
3கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்;
4ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்;
5வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்;
6தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்;
7பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்;
8பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்;
9இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்;
10எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்;
11அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்;
12வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்;
13சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்;
14அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்;
15பார்வோனையும் அவன் சேனைகளையும்
16தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்;
17பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்;
18பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்;
19எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்;
20பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்;
21அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்;
22அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்;
23நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்;
24நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்;
25உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்;
26பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்;