1இஸ்ரயேலரை ஆசீர்வதிப்பதையே யெகோவா விரும்புகிறார் என பிலேயாம் அறிந்தான். எனவே அவன் முன்புபோல் மாந்திரீகத்தின் உதவியை நாடாமல், பாலைவனத்தை நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான்.
2பிலேயாம் வெளியே பார்க்கையில், இஸ்ரயேலர் கோத்திரம் கோத்திரமாய் முகாமிட்டிருப்பதைக் கண்டான். அந்நேரத்தில் இறைவனின் ஆவியானவர் அவன்மேல் வந்தார்.
3அவன் இறைவாக்குரைத்துச் சொன்னதாவது:
4இறைவனின் வார்த்தைகளைக் கேட்கிறவனின் இறைவாக்கு,
5“யாக்கோபே, உன் கூடாரங்களும்,
6“அவை பள்ளத்தாக்குகளைப்போல் பரந்திருக்கின்றன,
7அவர்கள் வாளிகளிலிருந்து தண்ணீர் பாயும்;
8“இறைவன் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்;
9அவர்கள் சிங்கத்தைப் போலவும் பெண் சிங்கத்தைப் போலவும்
10அப்பொழுது பிலேயாமுக்கு விரோதமாக பாலாக்கின் கோபம் மூண்டது. அவன் தன் கைகளைத் தட்டி பிலேயாமிடம்: “நான் என் பகைவர்களைச் சபிக்கவே உன்னை அழைப்பித்தேன். ஆனால் நீயோ, இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதித்திருக்கிறாய்.
11இப்பொழுது நீ உடனடியாக உன் வீட்டிற்குப் போ. நான் உனக்கு நிறைய வெகுமதி கொடுப்பேன் என சொல்லியிருந்தேன். ஆனால் அந்த வெகுமதிகளை நீ பெறாதபடி யெகோவா உன்னைத் தடுத்துள்ளார்” என்றான்.
12அதற்குப் பிலேயாம் பாலாக்கிடம்: “நீ என்னிடம் அனுப்பிய தூதுவர்களிடம் நான் சொல்லவில்லையா?
13‘பாலாக், வெள்ளியினாலும், தங்கத்தினாலும் தன் அரண்மனையை நிறைத்து அதை எனக்குத் தந்தாலும் யெகோவாவினுடைய கட்டளையை மீறி என் சொந்த விருப்பத்தின்படி எந்த நன்மையையோ, தீமையையோ என்னால் செய்யமுடியாது. யெகோவா சொல்வதை மட்டுமே நான் செய்யவேண்டும்’ என்று சொல்லியிருந்தேனே!
14இப்பொழுது நான் என் மக்களிடத்திற்குப் போகப்போகிறேன். நீ வா. இந்த மக்கள் வரப்போகும் நாட்களில் உன் மக்களுக்கு என்ன செய்வார்கள் என நான் உன்னை எச்சரிப்பேன்” என்றான்.
15பின்பு அவன் தன் இறைவாக்கை உரைத்துச் சொன்னதாவது:
16இறைவனின் வார்த்தைகளைக் கேட்பவனின் இறைவாக்கு,
17“நான் அவரைக் காண்கிறேன், ஆனால் இப்பொழுது அல்ல;
18ஏதோம் வெற்றிகொள்ளப்படும்;
19யாக்கோபிலிருந்து ஒரு ஆளுநர் வருவார்.
20அதன்பின் பிலேயாம் அமலேக்கியரைக் கண்டு, இறைவாக்குரைத்து:
21பின்பு அவன் கேனியரைக் கண்டு இறைவாக்குரைத்து:
22ஆனாலும் கேனியரே! அசூர் உங்களைச் சிறைபிடிக்கும்போது
23பின்னும் பிலேயாம் இறைவாக்கைத் தொடர்ந்து சொன்னது:
24கித்தீம் கரைகளிலிருந்து கப்பல்கள் வந்து,
25அதன்பின் பிலேயாம் எழுந்து வீட்டிற்குத் திரும்பினான், பாலாக் தன் வழியே போனான்.