We Believe JesusFé, Esperança e Nova Vida

நெகேமியா 7

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← நெகேமியா 6 நெகேமியா நெகேமியா 8 →

1மதில் திரும்பவும் கட்டப்பட்டு முடிந்ததும், நான் கதவுகளை அதற்குரிய இடத்தில் வைத்தேன். வாசல் காவலர்களும், பாடகர்களும் லேவியர்களும் நியமிக்கப்பட்டார்கள்.

2எருசலேமுக்குப் பொறுப்பாக அரண்மனையின் தளபதி ஆளுநனான அனனியாவுடன் என் சகோதரன் ஆனானியை வைத்தேன். ஏனெனில் அனனியா அங்கிருந்த அநேகரைக் காட்டிலும் உத்தமமுள்ளவனும், இறைவனுக்குப் பயந்து நடக்கிறவனுமாயிருந்தான்.

3நான் அவர்களிடம், “பகலில் வெயில் ஏறும்வரை எருசலேமின் நுழைவாசல் கதவுகள் திறக்கப்படக் கூடாது. வாசல் காவலர் கடமையில் இருக்கும்போதே அவர்களைக்கொண்டு கதவுகள் பூட்டப்பட்டு, தாழ்ப்பாள்களை போடுங்கள். அத்துடன் எருசலேமின் குடியிருப்பாளர்களிலிருந்தே காவலர் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். அவர்களில் சிலரை காவல் நிலையங்களிலும், மற்றும் சிலரை அவர்களின் வீட்டின் அருகேயும் காவலுக்கு ஏற்படுத்துங்கள்” என்றும் சொன்னேன்.

4இப்பொழுது பட்டணம் பெரியதும், விசாலமானதுமாக இருந்தது. ஆனால் இருந்த மக்கள் தொகை மிகவும் குறைவாயிருந்தது. வீடுகளும் திரும்பக் கட்டப்படவில்லை.

5அப்பொழுது இறைவன் உயர்குடி மனிதரையும், அதிகாரிகளையும், சாதாரண மக்களையும் ஒன்றுகூட்டி, அவர்களை அவரவர் குடும்பங்களின்படி பதிவு செய்வதற்காக என் மனதை ஏவினார். முதலில் திரும்பி வந்தவர்களின் வம்ச அட்டவணை ஒன்று எனக்குக் கிடைத்தது. அதில் எழுதப்பட்டிருந்தது இதுவே:

6பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து, அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும், யூதாவுக்கும்

7செருபாபேல், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாய், நெகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள்.

8பாரோஷின் சந்ததி 2,172 பேர்,

9செபத்தியாவின் சந்ததி 372 பேர்,

10ஆராகின் சந்ததி 652 பேர்,

11யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,818 பேர்,

12ஏலாமின் சந்ததி 1,254 பேர்,

13சத்தூவின் சந்ததி 845 பேர்,

14சக்காயின் சந்ததி 760 பேர்,

15பின்னூயியின் சந்ததி 648 பேர்,

16பெபாயின் சந்ததி 628 பேர்,

17அஸ்காதின் சந்ததி 2,322 பேர்,

18அதோனிகாமின் சந்ததி 667 பேர்,

19பிக்வாயின் சந்ததி 2,067 பேர்,

20ஆதீனின் சந்ததி 655 பேர்,

21எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,

22ஆசூமின் சந்ததி 328 பேர்,

23பேஸாயின் சந்ததி 324 பேர்,

24ஆரீப்பின் சந்ததி 112 பேர்,

25கிபியோனின் சந்ததி 95 பேர்.

26பெத்லெகேமையும் நெத்தோபாவையும் சேர்ந்த மனிதர் 188 பேர்,

27ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,

28பெத் அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,

29கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,

30ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,

31மிக்மாஸின் மனிதர் 122 பேர்,

32பெத்தேல், ஆயியின் மனிதர் 123 பேர்,

33மற்ற நேபோவின் மனிதர் 52 பேர்,

34மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,

35ஆரீமின் மனிதர் 320 பேர்,

36எரிகோவின் மனிதர் 345 பேர்,

37லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 721 பேர்,

38செனாகாவின் மனிதர் 3,930 பேர்.

39ஆசாரியர்கள்:

40இம்மேரின் சந்ததி 1,052 பேர்,

41பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,

42ஆரீமின் சந்ததி 1,017 பேர்.

43லேவியர்கள்:

44பாடகர்கள்:

45வாசல் காவலர்கள்:

46ஆலய பணியாட்கள்:

47கேரோசு, சீயா, பாதோன்,

48லெபானா, அகாபா, சல்மாயி,

49ஆனான், கித்தேல், காகார்,

50ரயாயா, ரேசீன், நெக்கோதா,

51காசாம், ஊசா, பாசெயா,

52பேசாய், மெயூனீம், நெபுசீம்,

53பக்பூக், அகுபா, அர்கூர்,

54பஸ்லுத், மெகிதா, அர்ஷா,

55பர்கோஸ், சிசெரா, தேமா,

56நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.

57சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்:

58யாலா, தர்கோன், கித்தேல்,

59செபத்தியா, அத்தீல்,

60ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.

61பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.

62அவர்கள்:

63ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்:

64இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.

65ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன்7:65 யாத். 28:30. எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.

66எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.

67இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 245 பேரும் இருந்தனர்.

687:68 சில மூலப்பிரதிகளில் இந்த வசனம் இல்லை, எஸ்றா 2:66.மேலும் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,

69435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.

70குடும்பத் தலைவர்களில் சிலர் வேலைக்கு நன்கொடைகளைக் கொடுத்தார்கள். ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும்7:70 அதாவது, சுமார் 8.4 கிலோகிராம் தங்கம், 50 பாத்திரங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான்.

71சில குடும்பங்களின் தலைவர்கள் ஆலய வேலையின் கருவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும்7:71 அதாவது, சுமார் 170 கிலோகிராம் தங்கம், 2,200 மினா வெள்ளியையும்7:71 அதாவது, சுமார் 1,200 கிலோகிராம் வெள்ளி கொடுத்தார்கள்.

72மற்ற மக்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,000 மினா7:72 அதாவது, சுமார் 1,100 கிலோகிராம் வெள்ளி வெள்ளியையும், ஆசாரியருக்கான 67 உடைகளையும் கொடுத்தார்கள்.

73ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் மக்களில் குறிப்பிட்ட சிலருடனும், மீதியான இஸ்ரயேலருடனும் சேர்ந்து, தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள்.

← நெகேமியா 6 நெகேமியா நெகேமியா 8 →

நெகேமியா 7 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்