1பின்பு யாக்கோபு தன் மகன்களைக் கூப்பிட்டு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் எல்லோரும் என்னைச் சுற்றி நில்லுங்கள், இனிவரப்போகும் நாட்களில் நடக்கப்போவதை நான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.
2“யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்;
3“ரூபன், நீ என் முதற்பேறானவன்,
4தண்ணீரைப்போல் தளம்புகிறவனே, நீ இனிமேல் மேன்மை அடையமாட்டாய்;
5“சிமியோனும், லேவியும் சகோதரர்கள்.
6நான் அவர்களுடைய ஆலோசனைக்கு உடன்படாமலும்,
7அவர்களுடைய பயங்கரமான கோபமும்,
8“யூதா, உன் சகோதரர் உன்னைப் புகழ்வார்கள்;
9யூதா, நீ ஒரு சிங்கக்குட்டி;
10செங்கோலுக்குரியவர் வரும்வரை
11அவன் தன் கழுதையை திராட்சைச் செடியிலும்,
12அவனுடைய கண்கள் திராட்சை இரசத்தைவிட கருமையும்,
13“செபுலோன் கடற்கரையில் குடியிருந்து,
14“இசக்கார் இரண்டு பொதிகளுக்கிடையே படுத்திருக்கும்
15அவன் தன் இளைப்பாறும் இடம் எவ்வளவு நல்லதென்றும்,
16“தாண் இஸ்ரயேலின் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாயிருந்து,
17தாண், குதிரைமீது போகிறவன்
18“யெகோவாவே, நான் உம்முடைய மீட்புக்காகக் காத்திருக்கிறேன்.
19“காத் கொள்ளைக் கூட்டத்தாரால் தாக்கப்படுவான்,
20“ஆசேருடைய உணவு கொழுமையானதாய் இருக்கும்;
21“நப்தலி49:21 நப்தலி என்றால் மகிழ்ச்சியான வார்த்தைகளைப் பேசுவான் என்று அர்த்தம். அழகான குட்டிகளை ஈனும்
22“யோசேப்பு கனிதரும் செடி;
23வில்வீரர் அவனைக் கொடூரமாகத் தாக்கினார்கள்;
24ஆனால், அவனுடைய வில் உறுதியாய் நின்றது;
25உனக்கு உதவிசெய்யும் உன் தகப்பனின் இறைவனாலும் இப்படியாகும்.
26உன் தகப்பனின் ஆசீர்வாதங்கள்
27“பென்யமீன் ஒரு பீறுகிற ஓநாய்;
28இஸ்ரயேலின் பன்னிரு கோத்திரங்களும் இவர்களே, அவர்களுடைய தகப்பன் அவனவனுக்குத் தகுந்த ஆசீர்வாதங்களைச் சொல்லி, அவர்களை ஆசீர்வதிக்கும்போது சொன்னவை இவையே.
29பின்பு அவன் அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னதாவது: “நான் என் முன்னோர்களுடன் சேர்த்துக்கொள்ளப்படப் போகிறேன். ஏத்தியனான எப்ரோனிடமிருந்து வாங்கிய நிலத்திலே, என் தந்தையர்களை அடக்கம்பண்ணிய குகையிலேயே என்னையும் அடக்கம்பண்ணுங்கள்.
30அந்தக் குகை கானானிலுள்ள மம்ரேக்கு அருகில் மக்பேலா என்னும் வயல்வெளியில் இருக்கிறது; ஆபிரகாம் அதை ஏத்தியனான எப்ரோனிடமிருந்து வயலையும் சேர்த்து கல்லறை நிலமாக வாங்கினார்.
31அங்கேயே ஆபிரகாமும் அவர் மனைவி சாராளும், ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்; என் மனைவி லேயாளையும் நான் அங்கேயே அடக்கம்பண்ணினேன்.
32அந்த நிலமும் குகையும் ஏத்தியரிடமிருந்து வாங்கப்பட்டவை” என்றான்.
33யாக்கோபு தன் மகன்களுக்கு அறிவுரை கூறிமுடித்ததும், அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் தூக்கிவைத்து, இறுதி மூச்சை விட்டான். இவ்வாறு அவன் தனது முன்னோருடன் சேர்க்கப்பட்டான்.