We Believe JesusFé, Esperança e Nova Vida

ஆதியாகமம் 36

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஆதியாகமம் 35 ஆதியாகமம் ஆதியாகமம் 37 →

1ஏதோம் என்று அழைக்கப்படும் ஏசாவின் வம்சவரலாறு:

2ஏசா கானான் நாட்டுப் பெண்களிலிருந்து மனைவிகளை எடுத்தான்: ஏத்தியனான ஏலோனின் மகள் ஆதாளையும், ஏவியனான சிபியோனின் பேத்தியும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாளையும் திருமணம் செய்தான்.

3அத்துடன் இஸ்மயேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும் மனைவியாக்கிக் கொண்டான்.

4ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாஸைப் பெற்றாள், பஸ்மாத் ரெகுயேலைப் பெற்றாள்.

5அகோலிபாமாள் எயூஷ், யாலாம், கோராகு ஆகியோரைப் பெற்றாள். கானானில் ஏசாவுக்கு பிறந்த மகன்கள் இவர்களே.

6ஏசா தன் மனைவிகள், மகன்கள், மகள்களோடு, தன் வீட்டிலுள்ள எல்லோரையும் அழைத்துக்கொண்டு போனான். அவர்களுடன் தன் வளர்ப்பு மிருகங்களையும், மற்ற மிருகங்கள் எல்லாவற்றையும், கானானில் தான் சம்பாதித்த பொருட்கள் யாவற்றையும் எடுத்துக்கொண்டு, தன் சகோதரன் யாக்கோபை விட்டுச் சற்றுத் தூரமான நாட்டுக்குப் போனான்.

7அவர்களுடைய உடைமைகள் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ முடியவில்லை; அவர்களுடைய வளர்ப்பு மிருகங்கள் அதிகமாய் இருந்தபடியால், அவர்கள் இருந்த நிலப்பகுதி அவர்களுக்கு போதுமானதாக இல்லை.

8ஆதலால் ஏதோம் என்னும் ஏசா, சேயீர் மலைநாட்டில் குடியேறினான்.

9சேயீர் மலைநாட்டில் குடியிருந்த ஏதோமியரின் தகப்பனான ஏசாவின் வம்சவரலாறு.

10ஏசாவின் மகன்களின் பெயர்கள் இவையே:

11எலிப்பாஸின் மகன்கள்:

12ஏசாவின் மகன் எலிப்பாஸுக்கு திம்னாள் என்னும் வைப்பாட்டி இருந்தாள்; அவள் அவனுக்கு அமலேக்கைப் பெற்றாள். இவர்கள் ஏசாவின் மனைவி ஆதாளின் பேரன்கள்.

13ரெகுயேலின் மகன்கள்;

14சிபியோனின் பேத்தியும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் ஏசாவுக்குப் பெற்ற மகன்கள்:

15ஏசாவின் சந்ததிகளில் வந்த வம்சத்தலைவர்கள்:

16கோராகு, கத்தாம், அமலேக்கு என்பவர்கள். ஏதோம் நாட்டிலுள்ள எலிப்பாஸின் வழிவந்த வம்சத்தலைவர்கள் இவர்களே. இவர்கள் ஆதாளின் பேரன்கள்.

17ஏசாவின் மகன் ரெகுயேலின் மகன்கள்:

18ஏசாவின் மனைவி அகோலிபாமாளின் மகன்கள்:

19ஏதோம் என்னும் ஏசாவின் மகன்கள் இவர்களே. இவர்கள் அவர்களின் வம்சத்தலைவர்கள்.

20அந்த நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டிருந்த ஓரியரான சேயீரின் மகன்கள்:

21திஷோன், ஏசேர், திஷான். ஏதோமிலிருந்த சேயீரின் இந்த மகன்கள் ஓரியரின் வம்சத்தலைவர்கள் ஆவர்.

22லோத்தானின் மகன்கள்:

23சோபாலின் மகன்கள்:

24சிபியோனின் மகன்கள்:

25ஆனாகின் பிள்ளைகள்:

26திஷோனுடைய மகன்கள்:

27ஏசேருடைய மகன்கள்:

28திஷானுடைய மகன்கள்.

29ஓரியரின் வம்சத்தலைவர்கள்:

30திஷோன், ஏசேர், திஷான் என்பவர்கள்.

31இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்:

32பேயோரின் மகன் பேலா ஏதோமில் அரசனானான். அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.

33பேலா இறந்தபின்பு, போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான்.

34யோபாப் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.

35உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.

36ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.

37சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.

38சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.

39அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள்.

40பெயரின்படியும், வம்சத்தின்படியும், நிலப்பரப்பின்படியும் ஏசாவின் வழிவந்த வம்சத்தலைவர்கள்:

41அகோலிபாமா, ஏலா, பினோன்,

42கேனாஸ், தேமான், மிப்சார்,

43மக்தியேல், ஈராம் என்பவர்களாகும்.

← ஆதியாகமம் 35 ஆதியாகமம் ஆதியாகமம் 37 →

ஆதியாகமம் 36 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்