1லேவியின் மகன்கள்:
2கோகாத்தின் மகன்கள்:
3அம்ராமின் பிள்ளைகள்
4எலெயாசார் பினெகாசின் தகப்பன்;
5அபிசுவா புக்கியின் தகப்பன்,
6ஊசி செரகியாவின் தகப்பன்.
7மெராயோத் அமரியாவின் தகப்பன்,
8அகிதூப் சாதோக்கின் தகப்பன்,
9அகிமாஸ் அசரியாவின் தகப்பன்,
10யோகனான் அசரியாவின் தகப்பன்.
11அசரியா அமரியாவின் தகப்பன்,
12அகிதூப் சாதோக்கின் தகப்பன்,
13சல்லூம் இல்க்கியாவின் தகப்பன்;
14அசரியா செராயாவின் தகப்பன்,
15யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதாவையும், எருசலேமையும் நாடுகடத்தியபோது, யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டான்.
16லேவியின் மகன்கள்:
17கெர்சோமின் மகன்கள்:
18கோகாத்தின் மகன்கள்:
19மெராரியின் மகன்கள்:
20கெர்சோமின் மகன்கள்:
21அவனுடைய மகன் யோவா;
22கோகாத்தின் சந்ததிகள்:
23அவனுடைய மகன் எல்க்கானா,
24அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் ஊரியேல்,
25எல்க்கானாவின் சந்ததிகள்:
26அகிமோத்தின் மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சோபாய்,
27அவனுடைய மகன் எலியாப்,
28சாமுயேலின் மகன்கள்:
29மெராரியின் சந்ததிகள்:
30இவனது மகன் சிமெயா, இவனது மகன் அகியா,
31யெகோவாவின் ஆலயத்திற்குள் உடன்படிக்கைப்பெட்டி தங்கியிருக்க வந்தபின், இசைக்குப் பொறுப்பாகச் சிலரை தாவீது நியமித்தான்.
32இவர்களே சாலொமோன் எருசலேமிலுள்ள யெகோவாவினுடைய ஆலயத்தைக் கட்டிமுடிக்கும்வரை, சபைக் கூடாரமான ஆசரிப்புக்கூடாரத்தின் முன்னிலையில் சங்கீத சேவையுடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒழுங்குமுறையின்படி தங்கள் கடமைகளைச் செய்துவந்தனர்.
33தங்கள் மகன்களுடன் அங்கு பணிசெய்த மனிதர்கள் இவர்களே:
34இவன் எல்க்கானாவின் மகன், இவன் எரோகாமின் மகன்,
35இவன் சூப்பின் மகன், இவன் எல்க்கானாவின் மகன்,
36இவன் எல்க்கானாவின் மகன், இவன் யோயேலின் மகன்,
37இவன் தாகாத்தின் மகன், இவன் ஆசீரின் மகன்,
38இவன் இத்சாரின் மகன், இவன் கோகாத்தின் மகன்,
39ஏமானின் வலதுபக்கத்தில் நின்று அவனுடன் பணிசெய்தவனான அவன் சகோதரன் ஆசாப்:
40இவன் மிகாயேலின் மகன், இவன் பாசெயாவின் மகன்,
41இவன் எத்னியின் மகன்,
42இவன் ஏத்தானின் மகன், இவன் சிம்மாவின் மகன்,
43இவன் யாகாத்தின் மகன்,
44மெராரியராகிய இவர்களது சகோதரர்கள் அவர்களுடைய இடதுபக்கத்தில் நிற்பார்கள்:
45இவன் அசபியாவின் மகன்,
46இவன் அம்சியின் மகன், இவன் பானியின் மகன்,
47இவன் மகேலியின் மகன்,
48இவர்களோடிருந்த மற்ற லேவியர்கள் இறைவனது ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் மற்ற வேலைகளைக் கவனிக்க நியமிக்கப்பட்டார்கள்.
49ஆனால் இறைவனின் ஊழியன் மோசே கட்டளையிட்டபடியே, ஆரோனும் அவனுடைய சந்ததிகளும் மட்டுமே மகா பரிசுத்த இடத்திலுள்ள தகன பலிபீடங்களில் இஸ்ரயேலின் பாவநிவிர்த்திக்காக பலியிட்டு, தூப மேடைகளில் தூபங்காட்டும் வேலையையும் செய்வதற்கென நியமிக்கப்பட்டிருந்தனர்.
50ஆரோனின் சந்ததிகள் இவர்களே:
51அவன் மகன் புக்கி,
52அவன் மகன் மெராயோத், அவன் மகன் அமரியா,
53அவன் மகன் சாதோக்,
54அவர்களுக்கென பிரதேசமாக நியமிக்கப்பட்ட குடியிருப்புகளின் இடங்களாவன: முதல் சீட்டு கோகாத் வம்சத்தைச் சேர்ந்த ஆரோனின் சந்ததிகளுக்கு விழுந்தபடியால், அவர்களுக்கு அவ்விடங்கள் கொடுக்கப்பட்டன.
55அதன்படி அவர்களுக்கு யூதாவிலுள்ள எப்ரோனும், அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
56ஆனால் பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களும், கிராமங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குக் கொடுக்கப்பட்டன.
57ஆரோனின் சந்ததிகளுக்கு எப்ரோன் என்ற அடைக்கலப் பட்டணங்களில் லிப்னா, யாத்தீர், எஸ்தெமோவா,
58ஈலேன், தெபீர்,
59ஆஷான், யூத்சா, பெத்ஷிமேஷ் ஆகிய பட்டணங்களோடு அவற்றைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
60பென்யமீன் கோத்திரத்திற்கு கிபியோன், கேபா, அலெமேத், ஆனதோத் ஆகிய பட்டணங்களும், அவற்றைச் சேர்ந்த மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
61மீதமிருந்த மற்ற கோகாத்தியருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தின் பத்துப் பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
62கெர்சோமின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கேற்ப இசக்கார், ஆசேர், நப்தலி, பாசானில் இருக்கிற மனாசேயின் மற்ற பாதிக் கோத்திரங்களிலுமிருந்து பதின்மூன்று பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
63மெராரியின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கும் ஏற்ப ரூபன், காத், செபுலோன் கோத்திரங்களிலுமிருந்து பன்னிரண்டு பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
64இவ்வாறு இஸ்ரயேலர் இந்தப் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் லேவியர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
65யூதா, சிமியோன், பென்யமீன் ஆகிய கோத்திரங்களிலிருந்தும் முன்குறிப்பிடப்பட்ட பட்டணங்களையும் கொடுத்தார்கள்.
66சில கோகாத்திய வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து பட்டணங்கள் அவர்கள் பிரதேசமாகக் கொடுக்கப்பட்டன.
67எப்பிராயீமின் மலைநாட்டில் அடைக்கலப் பட்டணமான சீகேமும், அத்துடன் கேசேர்,
68யோக்மேயாம், பெத் ஓரோன்,
69ஆயலோன், காத்ரிம்மோன் ஆகியவை அவற்றோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
70எஞ்சியிருந்த கோகாத்தியரின் வம்சங்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து, ஆனேரும், பீலியாமும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் இஸ்ரயேலரால் கொடுக்கப்பட்டன.
71கெர்சோமியர் பெற்ற நிலங்களாவன:
72இசக்கார் கோத்திரத்திலிருந்தும் கெதெஷ், தாபேராத்,
73ராமோத், ஆனேம் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
74ஆசேர் கோத்திரத்திலிருந்தும் மாஷால், அப்தோன்,
75ஊக்கோக், ரேகோப் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
76நப்தலி கோத்திரத்திலிருந்தும் கலிலேயாவிலிருக்கிற கேதேசையும், அம்மோன், கீரியாத்தாயீம் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
77லேவியர்களில் எஞ்சியிருந்த மெராரியின் மற்றவர்கள்
78யோர்தானின் அக்கரையிலே எரிகோவின் கிழக்கேயிருக்கிற ரூபனின் கோத்திரத்திலிருந்தும் பாலைவனத்திலிருக்கிற பேசேரையும், யாத்சா,
79கெதெமோத், மேபாகாத் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
80காத் கோத்திரத்திலிருந்து, கீலேயாத்திலுள்ள ராமோத், மக்னாயீம்,
81எஸ்போன், யாசேர் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.