We Believe JesusFé, Esperança e Nova Vida

1 நாளாகமம் 24

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← 1 நாளாகமம் 23 1 நாளாகமம் 1 நாளாகமம் 25 →

1ஆரோனின் மகன்களின் பிரிவுகள் இவையே:

2நாதாப்பும், அபியூவும் தங்கள் தகப்பன் இறப்பதற்கு முன்னே இறந்துவிட்டார்கள். அவர்களுக்கு மகன்கள் இருக்கவில்லை. அதனால் எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரியர்களாகப் பணிபுரிந்தனர்.

3எலெயாசாரின் வழித்தோன்றலான சாதோக்கின் உதவியுடனும், இத்தாமாரின் வழித்தோன்றலான அகிமெலேக்கின் உதவியுடனும் நியமிக்கப்பட்ட பணியைச் செய்வதற்கென, தாவீது அவர்களைப் பிரிவுகளாகப் பிரித்தான்.

4இத்தாமாரின் வழித்தோன்றலைவிட எலெயாசாரின் வழித்தோன்றலில் தலைவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். அதற்கேற்ப எலெயாசாரின் சந்ததியிலிருந்து பதினாறுபேர் தங்கள் குடும்பத் தலைவர்களாகவும், இத்தாமாரின் சந்ததியிலிருந்து எட்டுபேர் குடும்பத் தலைவர்களாகவும் பிரிக்கப்பட்டனர்.

5எலெயாசாரின் சந்ததியிலும், இத்தாமாரின் சந்ததியிலும் பரிசுத்த இடத்து அலுவலர்களும், இறைவனுக்குப் பணிசெய்யும் அலுவலர்களும் இருந்தபடியால், அவர்களைப் பாரபட்சமின்றி சீட்டுப்போட்டுப் பிரித்தார்கள்.

6லேவியனும் எழுத்தாளனுமான நெதனெயேலின் மகன் செமாயா அரசன், அதிகாரிகள், ஆசாரியன் சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலேக்கு, ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் குடும்பத் தலைவர்கள் ஆகியோர் முன்பாக அவர்களுடைய பெயர்களைப் பதிவுசெய்தான். எலெயாசாரின் குடும்பத்திலிருந்து ஒருவனும், இத்தாமாரின் குடும்பத்திலிருந்து ஒருவனுமாக சீட்டின் மூலம் மாறிமாறி தெரிவு செய்யப்பட்டனர்.

7முதலாவது சீட்டு யோயாரீபுக்கும்,

8மூன்றாவது ஆரீமுக்கும்,

9ஐந்தாவது சீட்டு மல்கியாவிற்கும்,

10ஏழாவது அக்கோத்ஸிற்கும்,

11ஒன்பதாவது சீட்டு யெசுவாவிற்கும்,

12பதினோராவது எலியாசீபிற்கும்,

13பதிமூன்றாவது சீட்டு உப்பாவிற்கும்,

14பதினைந்தாவது சீட்டு பில்காவிற்கும்,

15பதினேழாவது சீட்டு ஏசீரினுக்கும்,

16பத்தொன்பதாவது சீட்டு பெத்தகியாவிற்கும்,

17இருபத்தோராவது சீட்டு யாகினிற்கும்,

18இருபத்துமூன்றாவது சீட்டு தெலாயாவிற்கும்,

19யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் அவர்கள் போய், பணிசெய்வதற்கான ஒழுங்குமுறை இதுவே: இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அவர்கள் முற்பிதாவான ஆரோனுக்குக் கட்டளையிட்டபடியே, பணிசெய்வதற்கென நியமிக்கப்பட்டார்கள்.

20லேவியின் வழித்தோன்றலில் மிகுதியாயிருந்தோர் யாரெனில்:

21ரெகேபியாவின் மகன்களில் மூத்தவனான இஷியா,

22இத்சாரியரில் செலெமோத்து,

23எப்ரோனின் மகன்களில்

24ஊசியேலின் மகன்களில் மீகா,

25மீகாவின் சகோதரன் இஷியா,

26மெராரியின் மகன்களில் மகேலி, மூஷி என்பவர்கள் ஆவர்.

27மெராரியின் மகன்களில் யாசியாவின் மகன்களிலிருந்து பேனோ,

28மகேலியின் மகன்களில் எலெயாசார், இவனுக்கு மகன்கள் இருக்கவில்லை.

29கீஸின் மகன்களில் யெராமியேல்,

30மூஷியின் மகன்களில் மகேலி, ஏதேர், எரிமோத் என்பவர்கள் ஆவர்.

31இவர்களும் ஆரோனின் சந்ததிகளான தங்கள் சகோதரர் செய்ததுபோல, அரசன் தாவீது முன்பும், சாதோக்குக்கும், அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களின் குடும்பத் தலைவர்களுக்கும், லேவியருக்கும் முன்பாகத் தங்கள் பணிகளுக்காக சீட்டுப்போட்டார்கள். மூத்த சகோதரனின் குடும்பங்களும், இளைய சகோதரனின் குடும்பங்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டன.

← 1 நாளாகமம் 23 1 நாளாகமம் 1 நாளாகமம் 25 →

1 நாளாகமம் 24 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்